Search

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல -விக்டர்!

என்னுடைய வாதம் (கொப்பே) சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் நியாயப் படுத்தக் கூடிய ஆயுதப் போரை எல்ரிரிஈ நடத்தியதே தவிர அது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்பல்ல நாங்கள் ஜரோப்பிய நீதிமன்றத்தில் எல்ரிரீஈ மீதான தடை நீக்கத்திற்காக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். தடை நீதிக்குப் புறம்பானது என்று நாம் வாதிடுகிறோம். முதலாவதாகப் போர் முடிந்து மூன்று வருடங்களாகின்றன தடைக்குத் தேவை இருக்கவில்லை.

இரண்டாவதாக ஏற்கனவே ஹேக் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட தீர்ப்பின்படி எல்ரிரிஈ ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல, அது தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடும் விடுதலை அமைப்பு.

மூன்றாவதாக இலங்கையில் நடந்த போரில் பங்கு பற்றிய இரு பகுதியில் ஒன்றான எல்ரிரிஈயை மாத்திரம் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடுவதை அனுமதிக்க முடியாது.
என்னுடைய வாதம் (கொப்பே) சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் நியாயப் படுத்தக் கூடிய ஆயுதப் போரை எல்ரிரிஈ நடத்தியதே தவிர அது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்பல்ல.

மேற்கூறிய போரில் பங்குபற்றிய இரு பகுதியும் சம அளவில் சர்வதேசச் சட்டங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்கள். ஒரு பகுதியைப் பயங்கரவாத அமைப்பாகவும் அடுத்த பகுதியை சட்டத்திற்கு உட்படாத அரசாகவும் மதிப்பிட முடியாது.

என்னுடைய பார்வையில் சர்வதேச சமூகம் படிப்படியாகச் சிறிலங்கா பற்றிய உண்மையை உணரத் தொடங்கியுள்ளது. சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. போர் குற்றங்கள், ஜெனோசைற் குற்றங்கள்இ மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்பதை சர்வதேச சமூகம் ஏற்கும் நிலையில் இருக்கிறது.

சர்வதேச நீதி விசாரணக்கு உட்படும்படியான அழுத்தம் சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கப்படுகிறது. போரின் இறுதிக் பகுதியில் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மறைக்க இயலாது. சாட்சிகளும் சடுதி மரண அறிக்கைகளும் ஒளிப்பட ஆவணங்களும் நிறைய இருக்கின்றன.ஆதாரங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

தமிழர் தரப்பு சோர்வு அடையாமல் சான்றுகளைத் தேடிப் பெற வேண்டும் எதிர்வரும் வழக்கிலும் அதற்குப் பிந்திய சர்வதேச நிதி விசாரணைகளிலும் அவை முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இது வரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் தரமானவை. அதற்கு பொறுப்பானவர்களைப் பாராட்டுகிறேன்.எல்ரிரிஈ மீது விதிக்கப்பட்ட தடை சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானது. இது தான் என்னுடைய முக்கியமான வாதம் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக எல்ரிரிஈ போரிட்டது.

சுய நிர்ணய உரிமைக்காக ஆயுதப் போர் நடத்தும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் அனுமதிக்கின்றது.ஹேக் நீதி மன்றத் திர்ப்பு மிக முக்கியமான படிக்கல். லுக்செம்போர்க் நீதி மன்ற விசாரணையை இந்த தீர்ப்பு எமக்குச் சாதகமாக வழிநடத்தும். சிறிலங்காப் போர் இரு பகுதிகளுக் கிடையில் நடந்த உள்நாட்டுப் போர் என்று நான் வாதிடுகிறேன். உண்மையும் அது தான் .சர்வதேச சட்டத்தின் முன்நிலையில் இரு பகுதியும் சரி சமன் என்ற நிலைப்பாட்டை ஐநா நிபுணர் குழு அறிக்கை மிகச் சரியாக எடுத்துள்ளது.

நீதி வழங்கப்படாமல் இலங்கையில் அமைதி ஏற்படப் போவதில்லை. குற்றங்களுக்கு காலக் கட்டுப்பாடு கிடையாது. காலம் பிந்தினாலும் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது .மூன்று வருடங்கள் பெரிய நீண்டகாலமல்ல. ஐ.நா ஒரு பொருத்தமான சுயேச்சையான நீதி விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும். சிறி லங்காவும் அதற்கு உதவும் நாடுகளும் நெடுகாலம் இழுத்தடிப்பையும் தடுப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள இயலாது .

ஜெனிவா, நீயு யோர்க்இ ஹேக், லுக்ஸ்செம்பேர்க் எதுவானாலும் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரே குரலில் சர்வதேச சமுகத்தின் மீது தொடர்ச்சியான அழுத்தம் கொண்டுவர வேண்டும் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத் தொடரின் போது தமிழர்கள் கட்டயமாகத் தமது பலத்தைக் காட்ட வேண்டும்.உங்கள் நெடிய பயணம் வெற்றியில் முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *