தமிழ் மொழி மீட்பின் தொடர் கற்க கசடற 2012!

என்ற திருவள்ளுவரின் குரலை பின்பற்றி, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை எடுத்துரைத்து, தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பதே தமிழ் இளையோர் அமைப்பாகிய எம்மால் நடாத்தப்பட்ட ‘கற்க கசடற 2012’-ன் திருக்குறள் போட்டியின்  நோக்கமாகும்.

அந்த நோக்கை அடிப்படையாக கொண்டே எம் நிகழ்வு பேச்சு, பாடல், நடனம், பரதநாட்டியம் போன்றவையும் அத்துடன், எங்கள் போட்டியாளர்களை பாராட்டி பரிசு வழங்குதல் போன்ற நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக அமைந்தது.

எமது போட்டியில் பிரதம விருந்திராக கலந்து சிறப்பித்தவர். புலவர் திரு.சிவநாதன் அய்யா அவர்கள். அவருடன் திருமதி. சிவநாதன் அவர்களும் ஏனைய விருந்தினர்களும் எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார். புலவர் திரு.சிவநாதன் அவர்கள் தான் வழங்கிய சிற்றுரையில் எம் நிகழ்வை சிறப்பாக பாராட்டி பேசியதுடன், இனி வர இருக்கும்வேலைத்திட்டங்களுக்கும் வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

எங்களுடைய இந்த போட்டியில் பங்குபற்றியவர்களினதும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினரது பங்களிப்பும் மிகவும் ஆதரவாக அமைந்தது. நேற்றைய நிகழ்வில் அந்தநிகழ்விடம் நிரம்பும் படியாக அமைந்திருந்தது அவர்களின் ஆதரவும், வரவேற்பும். அத்துடன், பரிசு பெற்றவர்களில் சிலர்  தங்களது பரிசை இளையோர் அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கியது நன்றிக்குரியது. அத்துடன் அங்கு வந்திருந்த பெரியோர்களும் தம்மால் முடிந்த உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு நடைபெற்ற நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. அவைகள் கலைக்கூடங்கள், தமிழ் பாடசாலைகள் சார்பாகவும், தமிழ் இளையோர் அமைப்பினராலும் வழங்கப்பட்டிருந்தன. இதில் தமிழ் இளையோர் அமைப்பினரால், எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேறு சில வேலைத்திட்டங்களின் விவரப்படைப்பு ஒன்று உள்ளடக்கப்படிருந்தது, அது அங்கு வந்திருந்தவரகளுக்கு எமது வேலைத்திட்டங்களின் மேற்பார்வையை கொடுக்க கூடியாதாக அமைந்திருந்தது.

இவ்வாறாக நடைபெற்ற விழாவில் கலந்து சிறப்பித்திருந்த, பிரதம விருந்தினருக்கும், ஏனைய விருந்தினர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் அதோடு எமது ஆதரவாளர்களுக்கும் பாராட்டுக்களையும், மகிழ்ச்சியோடு நன்றியையும் தெரிவிக்கும் முகமாக நன்றியுரையோடு எமது ‘கற்க கசடற-2012 ‘-ன் பரிசளிப்பு விழா இனிதே நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published.