வல்வை செய்திகள்

வல்வை ஒற்றுமையின் கரப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்பியனாகியது வல்வை ஒற்றுமை விளையாட்டு கழகம், 2ம் இடத்தைப் பெற்றனர் றெயின்போ அணியினர்.

சம்பியனாகியது வல்வை ஒற்றுமை
விளையாட்டு கழகம்

மறைந்த ஒற்றுமை வீரர்கள் ஞாபகார்த்தமாக ஒற்றுமை விளையாட்டு கழகம் நடாத்தும் கரப்பாந்தாட்ட சுற்றுப்போட்டி
(Over game ) ( ஆண்கள்). 24.08 2023 வல்வை ஒற்றுமை மைதானத்தில் ஆரம்பமாகியது !

அதன்படி நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை ஒற்றுமை அணி முதலில் தீருவில் அணியை வெற்றி கொண்டு அதன் பிறகு அரையிறுதி ஆட்டத்தில் உதயசூரியன் அணியை வெற்றிகொண்டு இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது!

அதே போல் றெயின்போ அணி முதலில் நேதாஜி அணியை வெற்றி கொண்டு அரையிறுதி ஆட்டத்தில் சைனிங்ஸ் அணியை வெற்றி கொண்டு இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது!

நடைபெற்ற இறுதியாட்டத்தில் வல்வை ஒற்றுமை அணியை எதிர்த்து றெயின்போ அணி போட்டியிட்டது! இவ் இறுதியாட்டத்தில் றெயின்போ அணியை வெற்றி கொண்டு
சம்பியனாகியது வல்வை ஒற்றுமை அணி!

இரண்டாம் இடத்தைப் பெற்றனர்! றெயின்போ அணியினர்!