VEDA கல்வி நிலையத்தின் க.பொ.த (சா/த) பரீட்சையில் 29 மாணவர்கள் சித்தி அதில் இரண்டு மாணவர்கள் 9A சித்தி
VEDAகல்வி நிலையத்தில் கல்வி பயின்ற 30 மாணவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் 29 மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்து(97% சித்தி)க.பொ.த (உ/த) கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
VEDAகல்வி நிலையத்தின் அதி சிறந்த பெறுபேறாக 9A சித்தியினை செல்வன் V.யுவர்சன், செல்வி K.கோபிகா ஆகிய இரண்டு மாணவர்களும், 8A சித்தியினை செல்வன் M. டனுசன், செல்வன் V.விஸ்ணுராஜ், மற்றும் செல்வி V.வர்ணிகா ஆகிய மாணவர்களும், 7A சித்தியினை செல்வன் M.விணுஷ்ஜன், செல்வன் M.கலைமுகிலன் ஆகிய மாணவர்களும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VEDAகல்வி நிலையத்தில் க.பொ.த (சா/த) வரை கல்வி கற்று எமது கல்வி நிலையத்திற்கு பெருமையைத் தேடித்தந்த மாணவர்களுக்கு VEDAகல்வி நிலையம் தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் அவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட
பெற்றோருக்கும் இவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பாரிய பங்களிப்பினை வழங்கிய ஆசிரியர் குழாமிற்கும் VEDAகல்வி நிலையம் தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
மேலும் VEDAகல்வி நிலையம் இயங்குவதற்கு நிதி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வல்வையின் கல்வி முன்னேற்றத்திற்கு பாடுபட்டு முன்னேற்றத்தினை ஏற்படுத்திய வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா மற்றும் ஏனைய வல்வை நலன்புரிச் சங்கங்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் VEDAகல்வி நிலையம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
நன்றி


