சர்வதேச போட்டியில் தமிழீழ அணி , 3வது இடத்திற்கான கோப்பையை வென்றது.

சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி, தமிழீழம் 5 : ரேசியா 0.

ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வேதச உதை பந்தாட்ட போட்டியின் கடைசி நாளான இன்று 7 ஜூலை 2013 அன்று ஞாயிறு மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்துகொள்ளுவதற்காக தமிழீழ அணி Rateia அணியுடன் மோதினார்கள்.

இந்த சர்வதேச போட்டியானது கடந்த வியாழக்கிழமை Isle of man இல் Tynwald என்னும் மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் ஆறு அணிகளுக்கான இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக தொடங்கி குழு A மற்றும் குழு B என்ற நிலைப்பாட்டில் குழு Aஇல் மூன்று அணிகளும் குழு B இல் மூன்று அணிகளும்மோதி அதில் தெரிவடைந்த அணிகள் மீண்டும் இன்று முதலிடம் மற்றும் மூன்றாவது ஐந்தாவது இடங்களுக்காக போட்டி இட்டனர்.

tamileelam-team-game3-2 tamileelam-team-game3-3 tamileelam-team-game3-5 tamileelam-team-game3-6

இதுவரை நடந்த போட்டிகளில் குழு A இல் இருந்து Occitania அணியும் குழு B இல் இருந்து StJohns அணியினரும் பங்கு பெற்ற அணைத்து போட்டிகளிலும் வென்று முதல் இடத்துக்காக இன்று மோதுகின்றனர். அதே போல குழு A இல் இருந்து தமிழீழ அணியும் குழு B இல் இருந்துRaetia அணியினரும் மூன்றாவது இடத்துக்காகவும் குழு A இல் இருந்து Sealand அணியினரும் குழு B இல் இருந்து Alderney அணியினரும் ஐந்தாவது இடத்துக்காக இன்று போட்டியிடுகின்றனர். நேற்று மாலை (6 ஜூலை 2013 ) Occitanaia அணியினருடன் மோதி முதல் இடத்துக்கான போட்டி வாய்ப்பை இழந்த தமிழீழ அணி இன்று மூன்றாவது இடத்துக்காக Raetia அணியினருடன் மோதினர். தமிழீழ தேசிய கீதத்துடன் உற்சாகமாக தொடங்கிய இன்றைய போட்டி கட்டாயமாக வெற்றி காணுவோம் என்ற நிலையில் மிகவும் உற்சாகமாக நடந்தது.

போட்டி மிகவும் விறு விறுப்பாக சென்று கொண்டு இருப்பதையும் வீரர்களின் வேகமான விளையாட்டையும் பார்த்து எமது அணியை ஆதரிக்க வந்தோர் பெருமை கொண்டனர். முதலாவது இலக்கை லாவகமாக கைப்பற்றிய சிவரூபன் (5) அவர்கள் போட்டி தொடங்கி 3 நிமிடத்துக்குள் தமிழீழ அணிக்கு தமது முதல் பந்தினை கோல் கம்பத்தினுள் செலுத்தி போட்டியின் சமநிலையினை மாற்றினார்கள். அதை அடுத்து 15.20க்கு கஜேந்திரன்(10) உதவியுடன் மதன்ராஜ் (15) அணிக்கான இரண்டாவது இலக்கை உள்ளே செலுத்தி அணியின் இலக்கை இரண்டாக உயர்த்தினர்

மத்தியஸ்தரின் எச்சரிக்கைளையும் மீறி தமிழீழ அணி வீரர்களின் ஆட்டத்தை முறையற்ற வகையில் தடுத்து விளையாடிய Raetia அணியில் மூன்று பேருக்கு சிவப்பு மட்டை காட்டப்பட்டு போட்டியை விட்டு வெளியேற்றபட்டனர். முதலுதவிக்கு பொறுப்பாக இருந்த தீபன் அவர்கள் வீரர்களின் காயங்களை உடனுக்குடன் சரி செய்து அவர்களுக்கு உற்சாகம் தெரிவித்து வீரர்களை போட்டியில் தொடர்ந்து பங்கு பெறுமாறு வழி வகுத்து கொண்டு இருந்தார்.

போட்டியின் கடைசி சுற்றில் பனுஷந்துகாக(8) மைதானத்தில் இறங்கிய ஜிவிந்தன்(11) தொடர்ந்து மூன்று உதைபந்தாட்ட இலக்கை எதிர் அணி பந்தாட்ட இலக்கு வலைக்குள் இறக்கி ஈழ அணியின் மொத்த இலக்கு எண்ணிக்கைகளை ஐந்தாக உயர்த்தி அணிக்கு பெருமை சேர்த்தார்

இங்கிலாந்து முன்னால் உதைபந்தாட்ட வீரர் திரு Paul Reaney அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தமிழீழ அணி வீரர்களை பாராட்டி அவர்களுக்கு மூன்றாவது இடத்துக்கான வெற்றிக் கோப்பையையும் ஆட்ட கதாநாயகனுக்கான கோப்பையையும் பங்கு பற்றிய அனைவருக்கும் பதக்கம் அணிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published.