Search

அயோத்தியா ராமர் கோவில் இன்று பிரதிஷ்டை வழிபாடு நடைபெற்றுள்ளது.இவ்வழிபாற்றில் இந்திய பிரதமர் சிறப்பித்து வழிபட்டுள்ளார்.

குழந்தை முகம் கொள்ளை அழகு

3,00,00,00,000​​ ஆண்டு பழமையான கல்லில் வடிக்கப்பட்டது அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கருவறை விக்ரகம்

அயோத்தி_ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம், வரப்பட்டு கருவறைக்குள் வைக்கப்பட்டது.

மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், கறுப்பு நிற கல்லில் செதுக்கிய, 200 கிலோ எடை உடைய விக்ரகம், கருவறைக்குள் வைக்கப்பட்டது. முன்னதாக கருவறைக்குள் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த விக்ரகம் இன்று 22ம் தேதியன்று மதியம் 12:20 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்படது

நேற்றைய தினம் ராமர் விக்ரகத்தின் மீது புனித தீர்த்தம் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின், கணபதி பூஜை, வருண பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்டவை செய்யப்பட்டன. 121 வேத விற்பன்னர்கள் இந்த பூஜையில் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் சிலை 300 கோடி ஆண்டு பழமையான கல்லில் வடிக்கப்பட்டது என ஓய்வுபெற்ற புவியியல் பேராசிரியர் சி. ஸ்ரீகந்தப்பா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறம்போது;

புவியியல் ரீதியாக மைசூரை சுற்றியுள்ள பாறைகள் ஆர்க்கேன் தார்வார் கிராட்டன் என்பதன் ஒரு பகுதியாக உள்ளன. இப்பாறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஐசோடோபிக் ஆய்வுகள், இவை 300 கோடி ஆண்டுகள் பழமையானவை என்பதை தெரிவித்துள்ளது. மைசூர் பல்கலைகழகத்தின் புவி அறிவியல் துறையால் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், குழந்தை ராமர் சிலையை செதுக்கப் பயன்படுத்தப்பட்ட பாறை தென்னிந்தியாவின் மிக பழமையான பாறை என்றும், 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க அயோத்தி ராமர் குழந்தை முகம் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார்.

பல வருட போராட்டத்தின் பின்னர் அயோத்தியில் மீண்டும் உதித்த ஸ்ரீ ராமர்

இந்துக்கள் உலகில் அதிகமாக வாழும் இந்தியா என்கின்ற மிகப்பெரிய தேசத்தின் “மிகப்பெரிய இந்துக் கோயில் கும்பாபிஷேக நாள்” என்று இன்றைய 22.01.24 வரலாற்றில் முக்கிய நாளாக மாறியுள்ளது.

கோயில் சுமார் 161 அடி உயரத்தில், 28,000 சதுர அடி பரப்பளவில் இருக்கிறது.

இந்தக் கோயிலின் வடிவமைப்பு கட்டுமானத்திற்குப் பொறுப்பான சோம்புரா குடும்பத்தினர் உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட கோயில்களை உருவாக்கிய பெயர்பெற்ற, புகழ் மிக்க குடும்பத்தினர்.

அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்திரகாந்த் சோம்புராவின் மகன் ஆசிஷ் சோம்புரா இந்த வடிவமைப்புத் திட்டங்களை உருவாக்கினார் என்று தெரிவித்திருக்கின்றனர்.

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அத்திவாரம்: ராமர் மந்திரின் அத்திவாரம் இந்தியாவின் 2587 பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணை வைத்து உருவாக்கப்பட்டு புனிதமான அத்திவாரமாக போற்றப்படுகின்றது. ஜான்சி, பித்தோரி, ஹல்டிஹாட்டி, யமுனோத்ரி, சித்தோர்கார், பொற்கோவில் போன்றவை இத்தகைய சில புனித இடங்கள் ஆகும்.

இந்த ராமர் கோயில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளது, எந்தவொரு இரும்பும் அல்லது இரும்புக்கு இணையான பொருளும் பயன்படுத்தப்படவில்லை.

கோயிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களில் ‘ஸ்ரீ ராம்’ என்ற புனித கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது இராமர் சேது பாலம் கட்டப்பட்ட காலத்திய பழமையான நடைமுறையை ஒத்து இவ்வாறு பெயரைப் பொறித்திருக்கின்றார்களாம். இந்த செங்கற்களை சாதாரண செங்கற்களை விட கடினமும் உறுதியும் மிக்கவையாக அமைத்திருக்கின்றனர்.

சர்வதேச ஆன்மீக நட்புறவின் அடையாளமாக, இன்றைய முக்கியமான நாளுக்கு தாய்லாந்திலிருந்தும் மண் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கோயில் 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரம் என மூன்று தளங்கள், 360 தூண்கள் மற்றும் 12 கதவுகளுடன், இந்தியாவின் கட்டிடக்கலைத் திறமையின் சான்றை இன்னும் பல ஆண்டுகளுக்குப் பறைசாற்றப் போகின்றது.

மூன்று தளங்கள் கொண்ட, 2.7 ஏக்கர் பரப்பளவில், கீழ் தளத்தில் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது, முதல் தளத்தில் பஜனை மண்டபம். இது ஹர்பூர், கிராதகிரில் இருந்து பெறப்பட்ட இளஞ்சிவப்பு மணற்கற்கலான பார்க்கர்பூர் மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற்ற பிரதிஷ்டை விழா இந்தியாவிலிருந்து 150 நதிகளின் புனித நீரால் மேற்கொள்ளப்பட்டது என்று அறிக்கைகள் கூறுகின்றன.

கோயிலின் அத்திவாரத்திற்கு கீழே காலம் கடந்து நீடிக்க கூடிய ஒரு செப்புத் தகட்டில் (Time capsule) ராமர், அயோத்தியா ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்டு 2000 அடி கீழே புதைக்கப்பட்டுள்ளது, இது கோயிலின் அடையாளத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்து சொல்வதற்காக செய்யப்பட்டுள்ளது.
Cop