Search

வல்வை முரளிதரன் உதை-சம்பியனாகியது இளங்கதிர் அணி

தாமோதரம்பிள்ளை முரளிதரன் ( தாமு முரளி) முதலாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் ரொறோண்டோ புளுஸ் பவுண்டேஷன் அனுசரனையில் வல்வை விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்தும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

25/01/2024 நடைபெற்ற இறுதியாட்டத்தில் நேதாஜி அணியினை எதிர்த்து இளங்கதிர் அணியானது மோதியது. பரபரப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் இளங்கதிர் அணியானது 3:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

இளங்கதிர் அணிசார்பாக புவிராஜ், கபில்ராஜ், பிரசாந் தலா,ஒவ்வொரு கோல்களினை பெற்றுக்கொடுத்தனர்.

வெற்றிபெற்ற சம்பியனாகிய இளங்கதிர் அணிக்கு 15000/= பணப்பரிசிலுடன் வெற்றிக்கிண்ணமும் மற்றும் இரண்டாமிடத்தினை பெற்ற நேதாஜி அணிக்கு 10000/= பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதிப்போட்டியின்
*ஆட்டநாயகன் :− பிரசாந் (இளங்கதிர்)
*கோல்காப்பாளர்பிரதாபன்(இளங்கதிர்)
*சிறந்த பின்கள வீரர் :− கண்ணன் (இளங்கதிர்)

முதலாமிடம்,இரண்டாமிடம், ஆட்டநாயகன்,தொடராட்ட நாயகன்,சிறந்தகோல்காப்பாளர் ,சிறந்த பின்கள வீரர்களிற்கான பணப்பரிசில்களினை வல்வை புளுஸ் பவுண்டேசன் (ரொறொன்டோ) அன்பளிப்பாக வழங்கியதோடு அணிகளிற்கான வெற்றிக்கிண்ணங்களினை தாமோதரம்பிள்ளை முரளிதரன் (முரளி தாமு) குடும்பத்தினர் வழங்கி கௌரவித்தார்கள்.