வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் உதைபந்தாட்டசுற்றுத்தொடரில் இன்று வட இலங்கை புகழ் பெற்ற வல்வை கணபதி மின் அமைப்பாளர்களின் மின் ஒளியிலான மாபெரும் கால் இறுதி ஆட்டம் 07.07.2013 வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிற்பகல் 7.00 ஆரம்பமாகியது.முதல் நிகழ்வாக வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக இல்லங்களுக்கிடையிலான உதைபந்தாட்டசுற்றுத்தொடரில் மஞ்சள்இல்லம், நீலம்இல்லம் மோதியது இதில் மஞ்சள்இல்லம் 3:1 என வெற்றிபெற்றது இரண்டாவது ஆட்டத்தில் யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து யாழ் ரெட்றேஞன்சஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.இதில் 06:00 என கோல்களைப் போட்டு யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றன. மூன்றாவது ஆட்டத்தில் டயமன்ஸ் விளையாட்டுக்கழகதை எதிர்த்து யாழ் ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் மோதியது,இதில் 04:00 என்ற கோல்கணக்கில் யாழ் ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றன போட்டிகள் இனிதே நிறைவடைந்தன.