அண்மையில் விஜய் தொலைகாட்சியில் மறந்துபோகுமா மண்ணின் வாசனை என்ற பாடலை பாடியதன்மூலம் இழந்துபோன தமிழீழதாயகத்தின் சோகத்தை வெளிப்படுத்தி அனைவரின் அபிமானத்தை பெற்றிருக்கிறார் செல்வி.சரிகா நவநாதன்.
இந்த சிறுமியின் தந்தையான வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியை சேர்ந்த பெரியதம்பி நவநாதனுடன் எமது இணையம் சார்பாக நாம் உரையாடியபோது அவர் கூறியவை சில..
இந்த சிறுமி தனது சிறுவயதில் இருந்தே மிகுந்த ஞாபகசக்தியும் எதையும் ஒருமுறை கேட்டாலேயே நினைவில் வைத்திருக்கும் திறனும் கொண்டிருக்கிறார்.
கனடாவானொலியான CTR ல் கடந்த ஆறுவருடங்களாக ஒவ்வொரு வாரமும் பாடல்களை செல்வி.சரிகா பாடிவருகின்றதும் குறிப்பிட தக்கது.
அநேகமான திருக்குறள்களை இவர் நினைவில் வைத்திருந்து கூறக்கூடியவர்.
அத்துடன் சங்கீதஆற்றலும் இவருக்கு சிறுவயதுமுதலே இருக்கின்றது.
தமிழகத்தின் சிறந்த பாடகிகளில் ஒருவரான நித்தியசிறீ மகாதேவனின் மாமானாரிடம் மாணவராக இருந்த நவராசகுலம் முத்துக்குமாரசாமி அவர்களிடம் செல்வி.சரிகா கனடாவில் தமிழிசையையும் கர்நாடக இசையையும் பயின்றுகொண்டிருக்கிறார் என்று அவரின் தந்தை கூறினார்.
தமிழகத்திலிருந்து தமிழினஉணர்வாளரும் இயக்குனருமான திரு.சிபிசந்தர் எமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றார்.
தமிழினஉணர்வாளரும்,தமிழீழவிடு
Previous Postதமிழர் கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்..
Next Postஇந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!