இலங்கையில் எரிபொருள் விலை திருத்தம் | பெற்றோல் 12 ரூபாவினால் குறைப்பு

இலங்கையில் எரிபொருள் விலை திருத்தம் | பெற்றோல் 12 ரூபாவினால் குறைப்பு

⭕எரிபொருள் விலை திருத்தம் | பெற்றோல்ல 12 ரூபாவினால் குறைப்பு

🔹இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

◾இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.

◾379 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 337 ரூபாவாகும்.

◾317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 307 ரூபாயாகும்.

◾355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.

◾மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஒரு லீற்றர் 202 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது.