வலிகாமம் லீக் அனுமதியுடன் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் நடாத்தும் அமரர்களான கலாபூஷணம் முருகுப்பிள்ளை விக்கினேஸ்வரநாதன், (பிங்களமோதகமாமரபிள்ளையார் கோவில் அறங்காவலர், மத்தள வித்துவான்) விக்கினேஸ்வரநாதன் செல்வமணி ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர் ரமேஸ் அவர்களது அனுசரணையில் 9 பேர் கொண்ட மாவட்ட ரீதியிலான மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி
07/09/2024 அன்று மூன்றாவது போட்டியில் கீரிமலை சிவானந்தா விளையாட்டு கழகத்தை எதிர்த்து வல்வை அணி மோதியது. போட்டியின் முடிவில் வல்வை விளையாட்டுக்கழகம் 1:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆட்ட நாயகனாக வல்வை விளையாட்டுக்கழக வீரர் ஆதி தெரிவு செய்யப்பட்டார்.