வடமராட்சி கல்வி வலயத்தினால் கடந்த 22.07.2013 அன்று நடாத்தப்பட்ட பௌர்ணமி தின விழாவில்
க.பொ.த(சாஃத) பரீட்சையில் விசேட(9யு) சித்தி பெற்ற வடமராட்சிப் பாடசாலை மாணவர்களும், வலயமட்டத்தில் பாடரீதியாக அதியுயர் சித்திவீதத்தனைப் பெற்ற பாடசாலைகளின் பாட ஆசிரியர்களும், கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் வடமாகாண கல்வியமைச்சன் செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்களும், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.செல்வராஜா அவர்களும், வடமராட்சி கல்வி வலயப் பணிப்பாளர்,
பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், வடமராட்சி வலயப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களும், கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவி கணேசலிங்கம் கேசவி அவர்கள் கௌரவிக்கப்பட்டார். இவருடன் ஹாட்லிக்கல்லூரி 04 மாணவர்கள் மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை 04 மாணவர்கள், நெல்லியடி மத்தய மா.வி 03 மாணவர்கள், வட இந்துக் கல்லூரி 05 மாணவர்கள், வடமராட்சி மத்திய கல்லூரி 02 மாணவர்கள், உடுப்பிட்டி மகளிர் கல்லூர 01 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
வல்வை சிவகுரு வித்தியாசாலை வரலாற்றுப் பாடத்தில் அதியுயர் சித்திவீதத்தனைப் பெற்றமைக்காக பாட ஆசிரியர் திரு.சி.கிருஷ்ணகுமார் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். தமிழ்ப் பாடத்திற்காக ஹாட்லிக்கல்லூரி ஆசிரியரும், இந்து சமய பாடத்திற்காக மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை ஆசிரியரும், கிறிஸ்தவ பாடத்திற்காக தும்பளை சிவப்பிரகாச வித்தியாலய ஆசிரியரும், கணிதம், விஞ்ஞான பாடங்களிற்காக வடமராட்சி மத்திய கல்லூரி ஆசிரியரும், ஆங்கில பாடத்திற்காக நெல்லியடி மத்திய மா.வி ஆசிரியரும், கௌரவிக்கப்பட்டனர்.
Leave a Reply