நெல்லை : கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி போராட்டக்குழு தலைவர் உதயகுமார் பேட்டியளித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து போராட்டத்திற்காக யாரிடமும் பணம் எதும் பெறவில்லை என்றும் அணு உலையை சுற்றி இருக்கும் மக்கள் தரும் நிதியை வைத்துதான் போராட்டம் நடைப்பெறுகிறது என்றும் உதயகுமார் தெரிவித்துள்ளார். மீனவர்கள் தரும் நிதிக்கு கணக்கு காட்டவேண்டிய அவசியமில்லை என்றும் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதாக கூறுவதை அமைச்சர் நாராயணசாமி தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் நிதி தொடர்பாக அமைச்சர் கூறிய கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நான் யாரையும் தரக்குறைவாக பேசியதில்லை
மேலும் பிரதமருக்கு தவறான தகவலை கொடுத்து அமைச்சர் நாராயணசாமி திசை திருப்புகிறார். நான் யாரையும் எந்த நேரத்திலும் தரக்குறைவாக பேசியதில்லை என்றும் தரக்குறைவாக நான் பேசியதை அமைச்சர் நாராயணசாமி நிரூபிக்க முடியுமா என்றும் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் அணு சக்திக்கு எதிராகவே போராட்டம் நடத்துகிறோம் என்றும் அரசு அமைத்துள்ள வல்லுநர் குழு போராட்டக்குழு சந்திக்க மறுப்பது ஏன் என்றும் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அணுசக்தி துறையினர் கருத்தை மட்டுமே இனியன் குழு கூறுகிறது. போராட்ட குழுவினர் கருத்தை கேட்பதில் இனியன் குழு தயக்கம் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் தெளிவாக இருக்கிறார்
கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் தமிழக முதல்வர் தெளிவாக இருக்கிறார் என்றும் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கு நல்லது எது கெட்டது எது என்பது நன்றாக தெரியும் எனவும் உதயகுமார் தெரிவித்துள்ளார்.