நாடுகடத்தப்படும் தமிழர்கள்!

பிரித்தானியாவில் இருந்து அநேகமாக ஒவ்வொரு வாரமும் தமிழர்கள் சிறீலங்காவுக்கு பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நாடு கடத்தப்படுவதற்காக நூற்றுக்கணக்கான தமிழர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

அடிப்படையான மனித உரிமைகள்கூட மறுக்கப்பட்டிருக்கும் சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையே அங்கு நிலவுகின்றது.
ராணுவ முகாம்களால் சூழப்பட்ட திறந்த சிறைச்சாலை போல இருக்கும் தமிழர் பகுதியில் வாழும் எவரினதும் பாதுகாப்பும், உரிமைகளும் அச்சுறுத்தலுக்கும் சித்திரவதைகளுக்கும் கடத்தல்களுக்கும் உள்ளாகும் நிலை இருப்பதால் எவரையும் திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு பிரித்தானியாவின் அரச அமைப்புகளை தமிழ் மக்கள் கோர வேண்டும்.

எமக்கு இங்கே வாழும் உரிமையும், குடியுரிமையும் கிடைத்துவிட்டது என்ற நினைப்பில் எமது உறவுகளின் நிலையை கண்டும் காணாது இருப்பது மிகவும் தவறானது. எனவே உங்களால் முயன்ற முறைகளிலும் தெரிந்த தொடர்புகளுக்கு ஊடாகவும் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்துமாறு கோரவேண்டும்.

இது சம்பந்தமான அமைப்புகளுடனும் தொடர்புகளை மேற்கொள்ளுவோம்.
மேலதிக விபரங்களுக்கு:

Stop Deportation Network and London No Borders are groups that campaign against border controls. We want to make more links with people and
organisations in Peckham to build a strong movement against the detention and deportation of migrants.
+Email us: stopdeportation@riseup.net or noborderslondon@riseup.net
+More info: www.stopdeportations.wordpress.com or london.noborders.org.uk
+Tel: 07438185537 
இந்த செய்தியை அனைவருக்கும் அனுப்புங்கள் .

Leave a Reply

Your email address will not be published.