வல்வை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவின் முதலாம் நிர்வாக கூட்டம் கடந்த புதன் கிழமை 22.02.2012அன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் முக்கியமாக வல்வைநலன்புரிச்சங்கத்தின் குறுகியகால வேலைத்திட்டங்கள் பற்றியும் நீண்டகால வேலைத்திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.
இந்த வருடம் வல்வையின் இளம் சமுதாயத்தின் நலனுக்காக என்ன செய்யலாம் என்றும் ஆராயப்பட்டது. அதில் முதல் படியாக கல்விப் பொதுத் தராதர சாதாரணதர கல்வி மற்றும் உயர்தர கல்வி பயிலும் மாணவ மானவிகளிற்கான பரீட்சைக்குத் தயார்செய்யும் வகுப்புகள் ஒழுங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
இது பற்றிய மேலதிக விபரங்கள் இந்த இணையத்தளத்தில் வெகு விரைவில் வெளியிடப்படும் என்பதையும் பெற்றோர்களிற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
இதில் உங்கள் பிள்ளைகளையோ உறவினர் பிள்ளைகளையோ இணைப்பதற்கு ஆர்வமிருந்தால் தயவு செய்து எம்மை தொடர்பு கொள்ளவும். அத்துடன் உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ பாடம் கற்பித்தலில் ஆர்வமிருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எதிர்வரும் காலங்களில் வளர்ந்து வரும் சந்ததியினர்க்கு துறைசார் படிப்பு ஆலோசனைகள் வழங்குவதற்கு ஏற்றவhறு இங்கு துறைசார் பட்டப்படிப்புகளை பூர்த்திசெய்த இளையோரை ஒன்றினைத்து, பின் அவர்கள் மூலமாக ஆலோசனைகள் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டது. இதை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் உங்களுக்கு தெரிந்த,உங்கள் உறவினர்களில், துறைசார் படிப்புகளை பூர்த்திசெய்த இளையோரை எம்மக்கு அறிமுகப்படுத்துமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதில் இவ்வருட கோடைவிழா ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டிற்கான கோடைவிழ ஆடி மாதம் முதலாம் திகதி நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏனைய ஏற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளன. இது அனைத்தையும் விட முக்கியமாக இதுவரை காலமும் வல்வை நலன்புரிச்சங்கம் ஆற்றிவந்த அத்தனை தொண்டு உதவிகள் மற்றும் புனர்வாழ்வு உதவுகள் அனைத்தையும் தொடர்ந்து செய்வதாக நிர்வாகசபையினால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தகவல்: நிர்வாகசபை
வல்வை நலன்புரிச்சங்கம்
பிரித்தானியா