தீருவில் மைதானத்தில் இன்று நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டிகள் – உதயசூரியன், நேதாஜி இறுதிக்குத் தேர்வு

அமரர் வே .சோதிநாராயானசாமி (பரஞ்சோதியப்பா) மற்றும் சோ.சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப போட்டிகள் இன்று காலை வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் 2: 0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது.

இரண்டாவது போட்டியில் ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் சைனிஸ் 1 : 0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது.

அடுத்து முதலாவது அரை இறுதியாட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் 3 : 1 என்ற கோல்கணக்கில்
வெற்றியீட்டி இறுதியாட்டத்திற்கு நுழைந்தது.

அடுத்த இரண்டாவது அரை இறுதியாட்டத்தில் சைனிஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகம் 4 : 1 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி இறுதியாட்டத்திற்கு நுழைந்தது.

நாளை மாலை இறுதிப்போட்டி வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *