சவுதிக்கு வேலைக்குச் சென்ற பெண்; அடி காயங்களுடன் பூதவுடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சவுதிக்கு வேலைக்குச் சென்ற பெண்; அடி காயங்களுடன் பூதவுடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு வாகரை ஓமடியாமடு பிரதேசத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற செல்வி.யோகேஸ்வரன் சாந்தி (வயது 24) என்பவர் இறந்த நிலையில் உடலில் அடி காயங்களுடன் அவரது பூதவுடல் இலங்கைக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

santhi dea1

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தின் மண்டூரை பிறப்பிடமாக கொண்டவரும், வாகரைப் பிரதேசத்தின் ஓடியாமடு கிராமத்தை தற்போதைய வசிப்பிடமாக கொண்டவருமான செல்வி.யோகேஸ்வரன் சாந்தி என்பவர் தமது குடும்ப வறுமை நிலைமை காரணமாக சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தனது 20 வயதில் 2009.09.28ம் திகதி சென்றிருந்தார்.

மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த இப்பெண் சவூதி அரேபியாவுக்கு சென்று ஒருவருடத்தின் பின் தான் சுகமாக உள்ளதாக தனது உறவுகளுக்கு அறிவித்துள்ளார். அதன்பின் எந்த தகவலும் இல்லை.

02

இவர் கடந்த 4 வருடங்களாக சவுதியரேபிய நாட்டில் ஜித்தா நகரின் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த நான்கு வருடமாக தொடர்பு எதுவுமில்லா நிலையில் கடந்த யூலை மாதம் 27ம் திகதி இவர்; சவூதியில் நஞ்சருந்தி இறந்துள்ளதாகவும், இவரது சடலத்தை கொழும்பில் பொறுப்பேற்றுமாறும் சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு கடிதம் வந்துள்ளது.

இதனால் இவரது சடலத்தை கொழும்பில் சென்று பொறுப்பேற்க வசதியற்ற உறவுகள் கடன் பெற்று கொழும்பு சென்று விமான நிலையத்தில் சடல பெட்டியை பெற்றுக் கொண்டனர். ஆனால் அங்கு இவர்களது வறுமை நிலையை பார்த்து சடலத்தை ஒப்படைத்தவர்கள் பத்தாயிரம் ரூபாய் பணம் மட்டுமே வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை ஓமடியாமடுவுக்கு சடலப் பெட்டியை கொண்டு வந்த உறவுகள் ஞாயிற்றுக்கிழமை அன்று சடலத்தை அடக்கம் செய்யும் முன் திறந்து பார்த்துள்ளனர். ஆனால் இங்கு நஞ்சு உண்டதாக குறிப்பிட்ட அப்பெண்ணின் சடலம் உடல் முழுவதும் அடி காயங்களுடன் காணப்பட்டிருந்தது. பின்னர் இவ்விடயமாக ஊர் மக்களுக்கு வீட்டார் தெரியப்படுத்தினர்.

_MG_8777

இவ்விடயத்தை கேள்வியுற்ற ஊர் மக்கள் உடனடியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் இச்சம்பவம் பற்றி கூறியிருந்தனர்.

வெருகல் சித்திரவோயுதர் ஆலய இறுவெட்டு வெளியீட்டில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இசம்பவத்தை கேள்வியுள்ளதும் அங்கிருந்து வாகரை பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக சென்று வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் இவ்விடயமாக ஆராயுமாறு வேண்டுதல் விடுத்தார்.

அத்தோடு உறவினர்களின் வாக்கு மூலத்தையும் பொலிஸார் பதிவு செய்தனர். அத்தோடு சடலத்தை அடக்கம் செய்யுமாறும், இவ்விடயமாக தாங்கள் வெளிநாட்டு நலனோம்புகை அமைச்சருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதியுரை வழங்கியுள்ளார்.

பின்னர் ஓமடியாமடு கிராமத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சவூதியில் இருந்து அனுப்பப்பட்ட சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், உறவுகளுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

இவ்வியடமாக தான் வெளிநாட்டு நலனோம்புகை அமைச்சருடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், இது சார்பான தீவிர விசாரணைக்கான ஏற்பாடும், நஸ்ர ஈடும் கோருவதாகவும், அடித்து துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் உரியவருக்கு தகுந்த தண்டனை வழங்க கோருவதாகவும் உறவுகளுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாக இவ்வாறு வெளிநாடு செல்பவர்கள் சடலமாக அனுப்பப்படும் நிலை அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் வாழைச்சேனை கறுவாக்கேணியில் ஜோர்தான் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் சுடுபட்ட நிலையில் சடலமாக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை சீனித்தம்பி யோகேஸ்வரன் வயது (59) சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில்!

தனது மகளுடைய மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையினைக் கண்டறிய வேண்டுமென மரணமான பெண்ணின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

தனது மகள் சாந்தி 2009.09.28இல் பணிப்பெண்ணாக சவுதியரேபியா சென்றார். அங்கு சென்று இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார். அதன் பின்பு எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை. எனது மகளைப் பற்றிய தகவல் அறிய பல்வேறு இடங்களிலும் முகவர்களின் மூலமாகவும் தொடர்பு கொண்டேன். பலன் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் மகளின் சடலத்தையே காணமுடிகிறது என்று அழுதவாறு தெரிவித்தார்.

இந்நிலையில் சவூதி அரேபிய நாடு சென்றது தொடக்கம் எதுவிதமான பணமும் எங்களுக்கு அனுப்பவும் இல்லை. எனது மகளை கொடுமைப்படுத்தியே கொண்றிருக்க வேண்டும். காரணம் என்னிடம் சடலத்தை தரும் போது உமது மகள் நஞ்சருந்தி இறந்துள்ளதாகவே சவூதியில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர் என்று கூறினார்கள்.

ஆனால் இங்கு வந்து சடலத்தை பார்க்கும் போது முகப் பகுதி, மார்பு பகுதி, களுத்து பகுதி மற்றும் முளங்கால் பகுதிகளில் காயத் தளும்புகளும் அடி காயங்களும் காணப்படுகின்றன். எனது மகளை கொடுமைப்படுத்தியே கொண்றிருக்க வேண்டும். எனது மகளின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அரசாங்கம் இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடாத்துமாறு சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தை பணிக்க வேண்டும். வறுமை காரணமாகவே மகள் எனது அனுமதியின்றி மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்தார் என அவர் தெரிவித்தார்,

 

Leave a Reply

Your email address will not be published.