மரண அறிவித்தல் – திரு. சரவணபவ கதிரவேற்பிள்ளை
தோற்றம்: 16/02/1933 மறைவு: 14/03/2012
வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, திருகோணமலையைப் வதிவிடமாகவும் கொண்ட திருகோணமலை துறைமுக அதிகார சபை மேற்பார்வையாளராக பணி புரிந்த பவான் என் அழைக்கப்படும் திரு. சரவணபவன் கதிரவேற்பிள்ளை அவர்கள் மார்ச் மாதம் 14ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை-கமலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம்-மயோன்மகமாசி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற திருமயிலசோதியின் அன்புக் கணவரும், பத்மாச்சி, ஜனகிதேவி, சிவகணேசன்(கனடா) , யசோதரா, கிருஷ்ணகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், அமுதலிங்கம், காலஞ்சென்ற S.T.கீல், சாந்தினி(கனடா) , ஜீவாபாலரமணி, திலகவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ராஜேந்திரனின் சகோதரரும், Dr.சோதிமயம், சோதிஅருணாசலம், சோதிக்கலாபம் ஆகியோரின் மைத்துனரும், சுரேஸ்குமார், மஞ்சுளா, கோணேஸ்வரன், மாலதி, சரோன்கௌரி, Brain, Percycharles மேசியாபிரியாழினி, கனடாவைச் சேர்ந்தவர்களான துவாரகன், தினேஷன், ஜனனி, பிருந்தாவன், திருக்குமரன், இனியவன் ஆகியோரின் அன்புப் பேரனும ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மார்ச் மாதம் 17ம் திகதி சனிக்கிழமையும், மார்ச் மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரையும் 1810 Albion Road ல் அமைந்துள்ள Glendale Memorial Gardens Cemetery ல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் முற்பகல் 11:15 வரை அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
416-742-7294
416-747-5829