நாளை லொயோலா கல்லூரியில் நடைபெற இருக்கும் ஆய்வரங்கம் நிகழ்ச்சி எமது இணையம் ஊடாக நேரலை செய்யபடுகின்றது.இதில் சீமான் , அற்புதத்தம்மாள், கவிஞர் அறிவுமதி, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் பீ. லெனின், முனைவர் ஜோ அருண், பேராசிரியர் அ. மார்க்ஸ், எழுத்தாளர் சி. மகேந்திரன், எழுத்தாளர் பாமரன், ஊடகக் கலைகள் துறைத் தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார், முனைவர் ரேவதி ராபர்ட், முனைவர் ஞான பாரதி, பல்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்… பலர் பங்கு பற்றுகின்றனர்.
முதுகலை ஊடகக் கலைகள் துறை (தமிழ்வழி), லொயோலா கல்லூரி
மற்றும் மக்கள் ஆய்வகம் இணைந்து நடத்தும்
தமிழ் ஊடக/இலக்கிய/அரசியல்/ஈழத் தமிழர் வாழ்வியல் பதிவுகள்
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தைத் தொடக்கப்புள்ளியாய் வைத்து…
ஆய்வரங்கம்
நாள் & நேரம்
17.03.2012, பிற்பகல் 02.30 முதல் 05.30 வரை
இடம்
லொயோலா கல்லூரி, சென்னை
ஆய்வரங்க நோக்கம்
இன்று அனைத்து உலக நாடுகளின் கவனமும் குவிந்துள்ள
ஈழத் தமிழரின் சமகால வாழ்வியல் அனுபவங்களைத்
தமிழக அரசியல் பின்புலத்தில்
தமிழ் ஊடகங்களும் இலக்கியங்களும்
எப்படிப் பதிவுசெய்துள்ளன /செய்து வருகின்றன என்பதை
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தைத்
தொடக்கப்புள்ளியாக வைத்து ஆய்வுக்கு உட்படுத்த…
ஆய்வரங்கத் தலைப்புகள்
தமிழக அரசியல் சுழலில் ஈழம் / தமிழினம்…
ஈழ வாழ்வியல் குறித்த தமிழ்த் திரைக் கலைஞர்களின் நிலைப்பாடு…
தமிழ்த் திரைப்படங்களில் ஈழ வாழ்வியல் பதிவுகள் – உச்சிதனை முகர்ந்தால் வரை
தமிழ்ச் செய்தி ஊடகங்களில் ஈழ நிகழ்வுகள்…
தமிழ்ப் படைப்பாளிகள் பார்வையில் ஈழத் தமிழர் வாழ்வியல்…
பன்னாட்டுப் பார்வையில் ஈழ நிகழ்வுகள்…
ஈழ நிகழ்வுகள் குறித்த தமிழக மக்கள் உணர்வலைகள்;…
மானுடவியல் நோக்கில் தமிழின மீட்சி
ஆய்வரங்கப் பகிர்வாளர்கள்
அற்புதத்தம்மாள், கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர்
பீ. லெனின், முனைவர் ஜோ அருண், பேராசிரியர் அ. மார்க்ஸ், எழுத்தாளர் சி. மகேந்திரன்,
எழுத்தாளர் பாமரன், ஊடகக் கலைகள் துறைத் தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார், முனைவர்
ரேவதி ராபர்ட், முனைவர் ஞான பாரதி, பல்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்…
…கலந்துரையாட ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
சாரோன் செந்தில்குமார் (ஊடகக்கலைகள் துறை) 9444285103 /
அடைக்கலராஜ் (மக்கள் ஆய்வகம்) 9940365485