தமிழகத்தின் மக்கள் ஆய்வகம்,லொயோலா கல்லூரி முதுகலை ஊடகக் கலைதுறையினர் இணைந்து ஈழத்தமிழர் வாழ்வியல் பதிவுகள் என்ற தாலைப்பில் இன்று ஆய்வரங்கம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.இன்று பிற்பகல் சென்னையில் உள்ள லொயோலா கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்நிகழ்வில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட இயக்குனர் புகழேந்தி ,நாம்தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,இயக்குனர் மணிவண்ணன்,இயக்குனர் கௌதம் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் ஆய்வரங்கத்தில் கலந்து ஆய்வரங்கினை நடத்தினார்கள்.
இன்றை ஆய்வரங்கில் பல ஆய்வாளர்களின் கருத்துக்களின் படி சில ஆய்வுமுடிவுகளை தொகுத்து அறிவித்துள்ளார்கள்.
ஈழத்தமிழர்மீது இனஅழிப்பு போரினை நடத்திய ராஜபக்சவை போர்குற்றவாளிகாய அறிவிக்ககோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வரையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆய்வரங்கம் பாராட்டியுள்ளது.
நடப்பு ஜக்கியநாடுகள் பேரவைகூட்டத்தில் இலங்கை பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவாந்துள்ள தீர்;மானத்தை இந்தியா ஆதரிக்குமாறு நாடாளமன்றத்தில் வலியுறுத்திவரும் தமிழகப்பிரதிநிதிகளின் கோரிக்கையை ஆய்வரங்கம் ஆதரிக்கின்றது, தமிழகப் பிரதிநிதிகளின் இந்தபோரிக்கையிலுள்ள நியாயத்தை உணர்ந்து அவர்களை ஆதரிக்குமாறு மனிதஉரிமையில் அக்கறையுள்ள அனைத்து நாடாளமன்ற உறுப்பினர்களையும் ஆய்வரங்கம் கேட்டுக்கொள்கின்றது.
இலங்கையில் நடத்தப்பட்டது இனப்படுகொலை என இந்திய நாடாளமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு,ஜ.நாவிலும் இந்த திருத்தத்தைக்கொண்டுவரவேண்டும் என்று ஆய்வரங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய மாநிலமான தமிழகத்து மக்களின் ஏகோபித்த உணர்வுகளையும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மனிதாபிமானமுள்ள அனைவரது வேண்டுகோளையும் உதாசீனம் செய்யும் எந்த முடிவையும் இந்திய அரசு எடுப்பது இந்தியாவின் நீண்டநாள் நலனுக்கு உகந்ததாக இருக்காது என்பதை ஆய்வரங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் போர்முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் இலங்கை இனப்பிரச்சனைக்கு தனிஈழமே தீர்;வு எனகருதுவதையும் இலங்கையுடனான இந்திய அரசின் வெளியுறவுகொள்கையில் கவனத்தில் கொள்ளுமாறு ஆய்வரங்கம் கேட்டுக்கொண்டுள்ளது இதுகுறித்து இலங்கையிலும் பிறநாடுகளிலும் வாழும் ஈழத்தமிழரின் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டுமென ஆய்வரங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈழத்தமிழர் குறித்த செய்திகளை பொறுத்தவரை நடுநிலையுடன் செயல்பட்டுவரும் ஊடகங்களைப்பாராட்டும் அதேவேளையில் தமிழகச்செய்தித்தாள்களும் தொலைக்காட்சி நிலையங்களும் தங்களது கட்சி நிலைப்பாடுகளை கடந்து உண்மை நிகழ்வுகளை வெளியிடுமாறும் தமிழ்த்திரைப்படங்கள் வணிகநோக்கில் ஈழத்தமிழர் பிரச்சனையை அணுகுவதைத் தவிர்க்குமாறும் இந்த ஆய்வரங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.