“தானே” புயலால் பாதிக்கப்பட்ட கலலூரி மாவட்ட மக்களைப்பற்றி ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் இயக்குனர் தங்பர்பச்சான். இப்படத்தின் குறுந்தகடுக்கு ரூபாய் 100 விலையை நிர்ணயித்து இருக்கிறார் தங்கர். இதை அனைவரும் வாங்கவேண்டும்.இதில் கிடைக்கும் மொத்த நிதியையும் விகடன் மூலம் கடலூர் மாவட்ட மக்களுக்கு கொடுக்கபோகிறேன். இப்போது கடலூர் பக்கங்களில் நடந்துகொண்டிருக்கு கொடுமையான விசயம் ஒன்று தெரியுமா?. அங்கே ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தாமல் நிறுத்த ஆரம்பித்துள்ளார்கள். ஏனென்றால் அங்கே ஒரு திருமணம் நடந்தால் பசியால் வாடும் நூற்றுக்கணக்கானோர் மண்டபத்தில் குவிந்துவிடுவதால் பெரிய அடிதடியே நடக்கிறது.
இப்படி நம்முடைய சக உறவுகள் பட்டினியால் வாடிக்கொண்டிருப்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் துயர் துடைக்க என்னால் என்னால் முடிந்த சிறு உதவிதான் இந்த ஆவணப்படம் என்கிறார்.
இந்த ஆவணப்படம் கிடைக்குமிடம்:
தங்கர் திரைக்களம்
12/15 ஐந்தாவது தெரு
அச்சுதன் நகர்
ஈக்காட்டுதாங்கல்
சென்னை-32
தொடர்புக்கு: 9884719050