13இற்கு அப்பால் ஒரு அங்குலம் கூட தேவையில்லை – சுமந்திரன்!?

வடக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதி வழங்குவதாக கூறிய அதிகார பரவலாக்கத்தை மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிப்பரப்பான அரசியல் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கியுள்ள அதிகாரங்களை முழுமையாக வழங்குவதாக ஜனாதிபதி சர்வதேச சமூகத்திடம் தெரிவித்திருந்தார். அத்துடன் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கலை வழங்குவதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இதனால் ஜனாதிபதி வழங்குவதாக கூறியதற்கு அப்பால் ஒரு அங்குலம் கூட செல்ல நாங்கள் தயாரில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.