வட மாகாணசபைத் தேர்தல் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பஙகேற்பதற்காக ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சித் தகவல்கள் தெரிவிப்பதாகவும் தெற்கின் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
ஆந்த வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் வரையில் காத்திருப்பதாக, கட்சியின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளதாகவும் தெற்கினன் ஊடகங்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி அல்லது மாகாண ஆளுனரின் முன்னிலையில் முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள முடியும் என மாகாணசபைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண அமைச்சுப் பொறுப்புக்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இறுதித் தீர்மானம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.