வடக்கு அமைச்சர்கள் – போனஸ் ஆசனம் குறித்து இன்று முடிவு – TNAயின் கூட்டம் யாழில் தொடர்கிறது:-

வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும், போனஸ் ஆசனம் தொடர்பிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் எனத் தெரியவருகின்றது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள் போனஸாகக் கிடைத்தன. இதில் ஒரு ஆசனத்தை மன்னாரில் முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய ஒரு ஆசனத்தை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று மேற் கொள்ளப்படவுள்ளது.

அதேபோன்று மாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலும் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

முக்கிய இரு முடிவுகளையும் எடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலை வர்கள் இன்று கூடியுள்ளனர்.

நாளை திங்கட்கிழமைக்கு முன்னர், போனஸ் ஆசனங்களுக்கு உரியவர்களின் பெயர்களை அனுப்புமாறு தேர்தல்கள் ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.