மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளது – ஜெஹான் பெரேரா

மாகாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் டொக்டர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற மூன்று மாகாணங்களிலும் தேசியத்தை முதன்மைக் கருப்பொருளாகக் கொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அரசாங்கத்திற்கு எதிராக 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 60க்கும் மேற்பட்ட வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத அடிப்படையிலான தேர்தல் முடிவுகள் ஆபத்தான நிலைமையாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் முடிவுகள் தேசிய நல்லிணக்கத்தை மேலும் மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளக ரீதியாக பிளவடைந்த சமூகங்களின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தையோ, நாட்டின் சுபீட்சத்தையோ உறுதிப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.