வட மாகாண சபைக் கட்டிடம் யாழ் கைதடியில் – 15 ஆம் திகதி வட மாகாண சபையின் முதலாவது கூட்டம்
வடமாகாண சபைக்கான தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டவரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியிடமிருந்து வடமாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை நேரம் முற்பகல் இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வமான முதல்வர் நியமனத்தைப்பெற்றார் விக்கி! நியமன கடிதத்தை வழங்கினார் வடக்குஆளுநர் சந்திரசிறி!!
வடக்கு மாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று செவ்வாய்க் கிழமை வழங்கி வைத்தார். ஆளுநருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பில் நியமனக்கடிதத்தை இன்று வழங்குவது என முடிவாகியது. இதன்மூலம் வடக்கு முதல்வராக விக்னேஸ்வரன் அரசினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.