அமைச்சர் ஹெகலியவிற்கு போதிய சட்ட அறிவு இல்லை: சுமந்திரன் எம்.பி விமர்சனம்

அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெலவிற்கு போதிய சட்ட அறிவும் விளக்கமும் இல்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு இல்லையென்றும் இதனை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த கருத்திற்கு பதில் தெரிவிக்கும் போதே இதனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

சட்டரீதியாக வடமாகாண சபைக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும். சட்டத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு அதிகாரத்தையும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அமைச்சர் ஹெகலியவின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நாங்கள் சட்டத்திற்குள் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *