ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியின் முதலாவது போட்டி இன்று ஊரெழுவில் ஆரம்பமானது .
Super 8 Matches என்ற முறையின் கீழ் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடவுள்ளன.
இதன் அடிப்படையில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள வல்வை அணி இன்று நாவாந்துறை சென் நிக்லஸ் விளையாட்டுக் கழகத்துடன் மோதியது.
இதில் நாவாந்துறை சென் நிக்லஸ் விளையாட்டுக் கழகம் 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
பிரதீபன் மற்றும் ரசிகரன் ஆகியோர் வல்வை அணிக்காகாக 2 கோல்களைப் பெற்றிருந்தனர்.
சிறந்த தரப்படுத்தல் முறையில் இப்போட்டிகள் அமைவதால் இச்சுற்றுப் போட்டி மிகுந்த யாழ்பாணத்தில் உதைபந்தாட்ட ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.