தலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவர் ஹகிமல்லா மிசுட் இதனை அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை எனவும், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டு இலக்குகளையே தாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அரசாங்கம் ஊடகங்களில் அறிவித்த போதிலும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தங்களை அணுகியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் விரும்பினால் தாம் அதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அரசாங்கப் பிரதிநிகளின் பாதுகாப்பை உச்ச அளவில் உறுதிப்படுத்தத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகள் எதனையும் விதிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளை தலிபான்கள் கட்டுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த கால சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதற்கு அரசாங்கமே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’