இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதனை எதிர்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஆச்சரியமடையவில்லை. அதேவேளை கட்சியின் உட்பூசலை காரணமாகக்கொண்டு பொதுநலவாய மாநாடு குறித்து தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளமை குறித்து கவலையடைகின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணிக்கும் கனடாவின் நிலைப்பாட்டுடன் ஏனைய நாடுகளையும் இணைப்பதற்கான அந்த நாட்டின் முயற்சி தோல்விகண்டுள்ளது. அந்த வகையில் இலங்கை வெற்றியடைந்துள்ளது என்றே குறிப்பிடலாம் எனவும் அமைச்சர் கூறினார்.
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்றும் அதனை எதிர்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை மற்றும் பொதுநலவாய மாநாடு குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதில் எவ்விதமான ஆச்சரியத்தையும் அரசாங்கம் காணவில்லை.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஆரம்பம் முதலே புலிகளின் பிரதிநிதிகளாகவே செயற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் தற்போது இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை கூட்டமைப்பு எதிர்ப்பதென்பது புதுமையான விடயமல்ல.
சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு சார்பான புலம்பெயர் மக்கள் இலங்கையை அபகீர்த்திக்கு உட்படுத்தவேணடும் என்பதில் உறுதியாக இருந்துவருகின்றனர். அந்த வகையிலேயே கனடாவும் சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளுக்காக இம்முறை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால் இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணிக்கும் கனடாவின் நிலைப்பாட்டுடன் ஏனைய நாடுகளையும் இணைப்பதற்கான அந்த நாட்டின் முயற்சி தோல்விகண்டுள்ளது. அந்த வகையில் இல ங்கை வெற்றியடைந்துள்ளது என்றே கூறவேண்டும். காரணம் கனடாவின் தீர்மானத்தில் கன டாவே தனிமையடைந்து காணப்படுகின்றது. எந்தவொரு நாடும் கனடாவை பின்பற்றவில்லை. பல நாடுகள் தமது பங்குபற்றுதலை உறுதிப்படுத்தியுள்ளன. அதனால்தான் கனடா தனது முயற்சியில் தோல்வியடைந்துவிட்டது என்று கூறுகின்றோம்.
இது இவ்வாறு இருக்க தமது கட்சியின் உட்பூசலை காரணமாகக்கொண்டு பொதுநலவாய மாநாடு குறித்து தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளமை குறித்து கவலை யடைகின்றோம். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியானது இன்று நாட்டுக்கு நகை ச்சுவையை வழங்கும் கட்சியாக மாறி யுள்ளது.
கட்சி உட்பூசலினால் ஏற்பட்டுள்ள நிலைமையை காரணம் காட்டி மிகப் பிரதான சர்வதேச மாநாடு ஒன்றை பகிஷ்க ரிப்பதானது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.