வல்வை குச்சம் வாணி படிப்பகத்தால் நடாத்தப்பட்ட வாணி விழாவும்,கலை விழாவும் மற்றும் பரிசளிப்பும்,
18.10.2013 வெள்ளிக்கிழமை மாலை 8.00 மணிக்கு வல்வை குச்சம் சரஸ்வதி தாயின் வழிபாட்டுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் தலைமை உரை,ஆசீர் உரை ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. வல்வை மாணவர்களது போட்டி நிகழ்வுகள் 13.10.2013 காலை 9.00மணிக்கு அன்று நடாத்தப்பட்ட முதன்மை பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் வெகு விமர்சையாக நடைபெற்றது.இங்கு பாலர்களதும் கைவண்ணத்திலான கோலாட்டம், பாடல், பேச்சு,கதை, திருக்குறள், தேவாராம்,ஆசிரியர் கெளரவிப்பு ,நடனம்இபட்டி மன்றம் என்பன சிறப்பாக நடைபெற்றது. யாராலும் மதிப்பிட முடியாத வியக்கத்தக்க வகையில் நன்றாக நடனங்களை பயிற்றுவித்து அரங்கேற்றப்பட்டுள்ளது. இறுதியில் செயலாளரின் நன்றியுரையினை தொடர்ந்து அதிகாலை 2.00மணிக்கு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
வல்வை குச்சம் வாணி படிப்பகத்தால் நடாத்தப்பட்ட வாணி விழாவும்,கலை விழாவும்,18.10.2013





































































































Leave a Reply