செய்திகள்

வெள்ளவத்தையில் யாழ்ப்பாணத்தவர் வீட்டில் கொள்ளை! இரகசிய பொலிஸாரா?!

வெள்ளவத்தை – பெரேரா ஒழுங்­கை­யி­லுள்ள தொடர்மாடி­யி­லுள்ள வீடொன்­றுக்குள் புகுந்த இருவர் அந்த வீட்டின் உரி­மை­யா­ள­ரான ஓய்­வு­பெற்ற அதி­பரை மயக்­க­ம­டை­யச்­செய்து வீட்­டி­லி­ருந்த பொருட்­களை கொள்­ளை­யிட்டுச் சென்ற சம்­பவம் நேற்று முற்­பகல் இடம்­பெற்­றுள்­ளது. இந்தச் சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஓய்­வு­பெற்ற அதிபர் தனது மனை­வி­யு­டனும் மக­ளு­டனும் இந்த வீட்டில் வசித்து வரு­கின்றார். இவ­ரது மகன் இலண்­ட­னி­லி­ருந்து கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் இலங்கை வந்­தி­ருந்தார். இலண்­ட­னி­லி­ருந்து கொழும்பு வந்த மகன் தனது தாயா­ருடன் யாழ்ப்­பா­ணத்­துக்கு சென்­றுள்ளார். மகளும் வேலைக்குச் சென்ற நிலையில் ஓய்­வு­பெற்ற அதிபர் நேற்று தனி­யாக வீட்டில் இருந்­துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முற்­பகல் 11 மணி­ய­ளவில் தொடர் மாடி வீட்­டுக்குக் கீழ் வந்த இருவர் ஓய்­வுபெற்ற அதி­பரின் பெயரைச் சொல்லி அவ­ரது வீட்­டுக்கு செல்ல வேண்டும் என்று தொடர்­மா­டியின் பாது­கா­வ­லரிடம் கேட்­டுள்­ளனர். ஓய்வு பெற்ற அதி­பர்கள் இருவர் தொடர் மாடியில் இருக்­கின்­றனர் என்று பாது­கா­வலர் கூறி­ய­போது இலண்­ட­னி­லி­ருந்து அதி­பரின் மகனும் வந்­துள்ளார். அந்த வீட்­டிற்கே செல்ல வேண்­டு­மென இரு­வரும் கூறி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து தொடர்­மா­டியின் பாது­கா­வலர் ஓய்­வு­பெற்ற அதி­பரின் வீட்­டுக்கு உள்­ளக தொலை­பே­சியில் அழைப்பு எடுத்­த­துடன் அவ­ரது வீட்­டுக்கு இருவர் வந்­துள்ள தக­வலை தெரி­வித்­துள்ளார். இந்த நிலையில் தனது மக­னது நண்­பர்கள் யாரோ வந்­துள்­ளார்கள் என்று எண்­ணிய ஓய்­வு­பெற்ற அதி­பரும் வந்த இரு­வ­ரையும் வீட்­டுக்குள் அனு­ம­திக்­கு­மாறு பாது­கா­வ­ல­ரிடம் கூறி­யுள்ளார்.

பாது­கா­வ­லரும் வந்த இரு­வ­ரையும் தொடர்­மா­டியின் .மேலே செல்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்ளார். ஓய்­வு­பெற்ற அதி­பரின் வீட்­டுக்கு வந்த இரு­வரும் முதலில் நட்­பு­ற­வாக பேசி­யுள்­ளனர். தனது மகனின் நண்­பர்கள் என்­பதால் அதி­பரும் ஆரம்­பத்தில் நட்­பு­ற­வுடன் .பேசி­யுள்ளார். சிறி­து­நேரம் செல்ல தாங்கள் இர­க­சிய பொலிஸார் எனவும் மகன் குறித்து விசா­ரிக்­கவே வந்­துள்­ள­தா­கவும் இரு­வரும் கூறி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து கதி­ரை­யி­லி­ருந்து எழுந்த ஒருவர் யன்னல் பக்­க­மாக செல்­வ­துபோல் சென்­றுள்ளார் அப்­போது அவர் கைக்­குட்­டை­யொன்றை ஓய்­வு­பெற்ற அதி­பரின் முகத்­துக்கு அருகில் கொண்­டு­வந்­துள்ளார். இதன் பின்னர் அதிபர் மயக்­க­ம­டைந்­துள்ளார். முற்­பகல் 11.30 மணி­ய­ளவில் இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. நண்­பகல் 12.20 மணி­ய­ளவில் கண் வி­ழித்த ஓய்­வு­பெற்ற அதிபர் பார்த்­த­போது வீட்டின் விறாந்­தையில் இருந்த மடிக்­க­ணனி மற்றும் தனது பேர்ஸ் என்­பவை காணா­மல்­போ­யுள்­ளதை கண்­டுள்ளார்.

வீட்­டுக்குள் வந்த இரு­வரும் கொச்சைத் தமி­ழி­லேயே பேசி­யுள்­ளனர். இவர்கள் ஓய்­வு­பெற்ற அதி­ப­ருக்கு மயக்­கத்தை ஏற்­ப­டுத்­திய பின்னர் மடிக்­க­ண­னியையும் அவ­ரது பேர்­சையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ளனர். வரும்­போது இவர்கள் இரு­வரும் கைப்பை ஒன்­றினைக் கொண்டே வந்துள்ளனர். அதற்குள் மடிக்கணனியையும் பேர்சையும் வைத்துக்கொண்டு இவர்கள் சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

பட்டப்பகலில் தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் புகுந்து வீடொன்றில் இருவர் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் வெள்ளவத்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *