ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன் கொலைகள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை

ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன் கொலைகள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழு:-

 

 

 

 

 

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன் ஆகியோரின் கொலைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழு ஆராந்துள்ளது

குறிப்பாக பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் கொலை தொடர்பில் போதிய விசாரணைகளோ  முன்னேற்றமோ இல்லை எனவும் இந்தக்குழு விசனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இதே காலப்பகுதியில் கிழக்கில் வடக்கிலும் குண்டு வெடிப்புகள் மூலம் அரசாங்க படைப்புலனாய்வளர்களால் கருணா பிள்ளையான் தலைமையிலான ஆயுததாரிகளின் உதவியுடன் கொல்லப்பட்ட சந்திரநேரு, சிவனேசன் அகியோரின் கொலைகள் குறித்தும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற போதும் இவர்களின் கொலைகள் குறித்து நாடாளுமன்ற மனித உரிமைகள் குழுவும் கவனம் எடுக்கவில்லை என கூட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இதேவேளை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மறியல் தண்டனை அனுபவித்த காரணத்தால் அடுத்த நாடாளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்களில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்பட்டிருப்பதை இட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழு விசனம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 89(டி), 91 உறுப்புரைகளுக்கு அமைய சரத் பொன்சேகாவினால் இந்த தேர்தல்களில் 7 வருடங்களுக்கு பங்கேற்க முடியாதென இந்தக் குழு கூறியுள்ளது. 2010 இல் ஜனநாயக தேசிய முன்னணியின் கிண்ணம் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான இவர் ஹைகோப் வழக்கில் இராணுவ நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.