இமெல்டா சுகுமார் நற்சான்றிழ்!சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் பலாத்காரமே புரிவதில்லை –

வன்னியில் இருக்கும் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்திருக்கும் அதேவேளை பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் தமக்கு கிடைத்துள்ள போதிலும், அதில் ஒரு குற்றச்சாட்டு கூட இராணுவத்தினர் மீது சுமத்தப்படவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அத்தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது கணவனை பார்க்க செல்லும் வேளையில் தான் பாலியல் இம்சைக்கு படை அதிகாரிகளால் உட்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவதாக வன்னியில் உள்ள இளம் பெண் ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் சிறிலங்கா படையினர் எந்த குற்றமும் புரிவதில்லை என்றும் படையினருக்கு எதிராக ஒரு சிறிய குற்றச்சாட்டு கூட தன்னிடம் வரவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.