சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச ரீதியிலான விசாரணை நடத்தப்பட வேண்டியதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது எ னஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஏற்கனவே அரசாங்கம் ஆணைக்குழுக்களை நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுயாதீன விசாரணைக்குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.












Leave a Reply