மரண அறிவித்தல்-திரு கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம்

மரண அறிவித்தல்-திரு கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம்

(Captain Tharma – கட்டி அத்தான்)

மலர்வு : 5 யூன் 1945 — உதிர்வு : 13 ஏப்ரல் 2012

நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 13-04-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை(பொன்னுக்கண்டு) ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை(இராமநாதன் மேஸ்திரியார்), வள்ளிக்கொடி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலாவதி(லண்டன்), விக்னேஸ்வரன்(லண்டன்), பிறேமாவதி(லண்டன்), ஜெயகுமார் ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தசாமி(குட்டிக்கிளி), யோகானந்தசாமி(தங்கக்கிளி) மற்றும் நாகேஸ்வரி(ராதா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற ஹரீந்திரன், கரன், ஜெயலிங்கம், உமாசிறீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலங்கேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற சரவணபவானந்தவேல், சந்திரகுமாரி, கணேசமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, நிர்மலகுமாரி, வசந்தகுமாரி, சபானந்தமூர்த்தி, கிருஷ்ணகுமாரி, உதயகுமாரி, ஜெயகுமாரி, காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறேமானந்தன், லிஷாந்தி, செல்வானந்தன், வைஷ்ணவி, வித்தியா, அருணன், சிவானி, வர்ணிகா ஆகியோரின் ஆசைமிக்க பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் பெரியதம்பிரான் கோவிலடி பொலிகண்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சாந்தகுமாரி – மனைவி(வல்வை) — இலங்கை
செல்லிடப்பேசி:             +94772881188
கமலாவதி – மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:             +447896769719
விக்னேஸ்வரன் – மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:             +447875088730
பிறேமாவதி – மகள் — பிரித்தானியா
தொலைபேசி:             +442086487109
ஜெயலிங்கம் – மருமகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:             +447958652647

Leave a Reply

Your email address will not be published.