இலண்டனில் தொடர் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன் – திங்கள் மாலை ஆரம்பம்!

இலண்டனில் தொடர் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன் – திங்கள் மாலை ஆரம்பம்!

சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் சுப்ரமணியம் பரமேஸ்வரன் குதிக்கின்றார்.இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுணிங்க் வீதிக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பிக்கின்றார்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெறும் வரை தொடரவுள்ள இவ் உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் இணைந்து அடையாள உண்ணாநோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளுக்கு பரமேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.