சந்திரகுமார் (சிவா) தங்கவடிவேல் இரண்டாம் ஆண்டு நினைவுகள்
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்இ டென்மார்க் கோசன்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த காலம் சென்ற சிவா அவர்களின் இரண்டாண்டு ( 14.11.2013 ) நினைவுகள்.
ஐயா உம்மைப் பிரிந்து ஆண்டுகள் இரண்டு உருண்டன..
ஆண்டுகள் போல உருண்டு போக முடியாது..
தவிக்கின்றன நினைவுகள்..
துயர் பெரிது.. அதைவிட பெரிது பிரிவுத்துயர்..
நடக்க நடக்கக் கூடும் பாரம்போல.. நாட்களை
கடக்கக் கடக்கக் கூடுமையா பிரிவின் சுமை..
தூங்கினால் வருகிறாய் துடித்தெழுந்து ஏங்கினால்..
மறைகிறாய்.. துன்பியல் நாடகத்தின் துணி..
காற்றினிலே பறக்கிறது தனி..
பிரிவுத்துயரை மறக்க முடியுமென்று நினைத்தோம்
முடியவில்லை.. நீரின்றி பொழுது விடியுமென்று
நினைத்தோம் விடியவில்லை..
கோடையும் குளிரும் மாரியும் மழையும்
மாறி மாறி வருகின்றன.. வந்துமென்ன..
மாறாது நிற்கின்றன உம் நினைவுகளே..
மறக்க முடியவில்லை.. நினைவுகளை
துறக்க முடியவில்லை..
பதில் இல்லா கேள்வியுடன் பகல் இரவு
தெரியாது.. பதைபதைத்து நிற்கிறோம்..
விடையொன்று தருவீர்.. விழியிரண்டு
நீரை துடையென்று சொல்வீர்..
தூயவரே வணக்கம்.
மனைவி பிள்ளைகள்.
தொடர்பு தொலைபேசி : 22938157












Leave a Reply