மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி மேற்கொள்வது சட்டவிரோத செயல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் உறுப்பினர்களின் இழப்பை நினைவுபடுத்தும் முகமாகவே மாவீரர் தினத்தை அனுஸ்டித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னும் வடக்கு பகுதியில் கடந்த வருடங்களில் சில பிரிவினர் மாவீரர் தினத்தை அனுஸ்டித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வருடமும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த சில பிரிவினர் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் கூறுகின்றனர்.
வடக்கில் இருந்து வெளியாகும் தமிழ் ஊடகங்களிலும் இது குறித்து நேற்று செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் மாவீரர் தின அனுஸ்டிப்பு சட்டவிரோதமானதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பினரின் கட்டளைகளை மீறி செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.