தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் முன்னெடுத்த மாவீரர் நினைவு நாளினை நாசப்படுத்திய காவல்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த சொந்தங்களை நினைவு கூர்வது வழக்கம். அதற்காக அவர்கள் சிறப்பு முகாமில் உள்ளேயே நினைவு சின்னம் அமைத்து நவம்பர் 27 நாளில் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துவர்.

அணி அணியாக விளக்குகள் வைத்து மாவீரர்களுக்கு சுடர் வணக்கம், மலர் வணக்கம் செய்து வந்தனர். மஞ்சள் சிகப்பு வண்ண தோரணங்களை நினைவு சின்னம் சுற்றிலும் கட்டியிருந்தனர். கடந்த ஆண்டும் மாவீரர் நாளை சிறப்பு முகாமில் இருந்த அனைவரும் அனுசரித்தனர். இதனால் யாருக்கும் இடையூறு இல்லை. காரணம் இது அவர்கள் தனிப்பட்ட நிகழ்வாகவே அனுசரித்து வந்தனர்.

இந்நிலையில், மாவீரர் நாளை அனுசரிக்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், இன்று தமிழக காவல்துறை மாவீரர் நாளை அனுசரிக்க தடை விதித்தது. இறந்த உறவுகளுக்கு முகாமில் அஞ்சலி செலுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. அதை தொடர்ந்து மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரடியாக இடிக்கத் தொடங்கியது . இதை பார்த்த ஈழத் தமிழர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டனர்.

ஆனால் எதையும் காதில் வாங்கிப் போட்டுக் கொள்ளாத தமிழக காவல்துறை , மாவீரர் நாளுக்காக அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவு தூபி மற்றும் கொடிக் கம்பங்களை இடித்து அகற்றியது. தோரணங்களை கிழித்து எறிந்தது. இறந்த சொந்தகளுக்கு கூட அஞ்சலி செலுத்த இந்த அரசு தடை விதித்துள்ளதை முகாம் வாசிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையை கண்டித்து 45 ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழக அரசு இப்போது ஈழத் தமிழர்களுக்காக அனுசரிக்கப்படும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்து வருகிறது,

தமிழர்களுக்காக அனுசரிக்கப்படும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்து வருகிறது . முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுப் புற சுவரை அண்மையில் தமிழக அரசு இடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *