மரண அறிவித்தல்-திரு இராமசாமி (தண்டயல்) சாமியண்ணா அனந்தராசா
தோற்றம்: 14.12.1929 மறைவு: 19.04.2012
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் திருச்சி சீனிவாசநகரை வதிவிடமாகவும் கொண்ட திரு இராமசாமி (தண்டயல்) சாமியண்ணா அனந்தராசா அவர்கள் 19.4.2012 அன்று சிவபதமடைந்தார். அவர்கள் காலம் சென்ற இராமசாமி மாரிமுத்துவின் அன்பு மகனும், காலம் சென்ற இராமசாமி தையலமுத்துவின் அன்பு பெறாமகனும், காலம் சென்ற தம்பு இராசா, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும், ஞானகலை (குட்டி) அவர்களின் அன்பு கணவரும், சிவராம் (அருமை), ஸ்ரீதேவியின் பாசமிகு தந்தையும், மனோகரன், தவமணியின் அன்பு மாமனாரும், ஸ்ரீகரன் (கண்ணா), ஸ்ரீலக்ஷ்மி (கீதா), ஸ்ரீபைரவி, ஸ்ரீராம், ஸ்ரீராஜா ஆகியோரின் அருமைப் பேரனும், காலம் சென்ற அனந்தலெட்சுமி, காலம் சென்ற கமலாதேவி, சீதாதேவி, பாரததேவி, சக்திவேல் ஆகியோரின் அன்பு சகோதரனும், சிவகுரு, தவராசா, காலம் சென்ற அருட்சோதி, காலம் சென்ற கிருட்ணர், வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் அவரது இல்லத்தில் (திருச்சி) ஞாயிறு 22.04.12 மாலை நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்-A.R சிவகுரு (Australia) 61 2 9702 2068