வல்வையின் ஒரு அடையாளமாக விளங்கும், வல்வை கல்வி மன்றக் காணியை அரசாங்கம் போலீஸ் நிலையம் அமைக்கும் நோக்குடன் சுவீகரித்துள்ளது. இது சம்பந்தமான வடமராட்சி பிரதேசச் செலயரின் உத்தியோகபூர்வ பொது அறிவிப்பு குறித்த காணியின் முன்பக்கம் ஒட்டப்பட்டுள்ளது (கீழே இணைக்கப்பட்டுள்ளது)
இக்காணி தற்பொழுது கனடாவில் வசிக்கும் தவமணி ஷேக்ஸ்பியர் என்பவருக்குச் சொந்தமானதாகும்.
சுமார் 9 பரப்புடைய இக்காணியில் அமையப்பெற்றுள்ள கட்டிடம் வல்வெட்டித்துறையில் உள்ள ஒரு சில பெரிய கட்டத் தொகுதிகளில் ஒன்றாகும். அத்துடன் இங்கு பல ஆண்டு காலமாக வல்வைக் கல்வி மன்றம் என்னும் பெயரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று வெற்றிகரமாக முன்னர் 1996 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது எனபது குறிப்பிடத்தக்கது.
இக்காணியை வல்வையின் பொது நோக்கத்திற்காக சிலர் பெற முயன்றும் அம் முயற்சி கைகூடியிருக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.












Leave a Reply