பலாப்பழத்தில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் பலாப்பழத்தை சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். இங்கு பலாப்பழத்தை சாப்பிட்டால் எப்படி உடல் எடையில் மாற்றம் தெரியும் என்று பார்ப்போம்.
ஊட்டச்சத்துக்கள்
பலாப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையானது அதிகரிக்காமல் இருக்கும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமம், கூந்தல் போன்றவற்றிற்கும் தான் நன்மைகளை வழங்குகிறது. எனவே பலாப்பழம் சாப்பிட்டு, உடலை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.