வல்வை செய்திகள்

உலக சாரணர் தினம் (22.02.2014) ,உலக சாரணர்களின் தந்தை பேடன் பவுல் அவர்களின் நினைவு தினமும் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் விழாவும்.வல்வை சிதமபராக்கல்லூரி.வல்வை சிவகுரு வித்தியாலய சாரணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

உலக சாரணர் தினம் 22.02.2014 உலக சாரணர்களின் தந்தை பேடன் பவுல் அவர்களின் நினைவு தினமும் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் விழாவும். இன்று கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியில் பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமானது. பிரதம விருந்தினராக கோப்பாய் பிரதேச செயலாளரும் வருகைதந்திருந்தனர். அத்துடன் 20 மேற்பட்ட பாடசாலை சாரணர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். மற்றும் பாடசாலை சாரணர்களுக்கு சின்னம் சூட்டும் வைபவமும் நடைபெற்றது. வல்வெட்டித்துறையில் இருந்து வல்வை சிதமபராக்கல்லூரி,வல்வை சிவகுரு வித்தியாலய சாரணர்களும் கலந்து கொண்டுள்ளனர். வல்வை சிவகுரு வித்தியாலய சாரணர்களுக்கான மாவட்ட ஆணையாளர் விருது 3 சாரணர்களுக்கும் 1.பா.பாஸ்கரன் 2.அ.கஜன் 3.பா.மதுராஜ் பிரதம ஆணையாளர் விருது 3 சாரணர்களுக்கும் 1.பி.சதுர்ஜன் 2.செ.விதுசன் 3.)சிறி.அஜீத்குமார் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் கலை நிகழ்வுகளுடன் நகழ்வு நிறைவுபெற்றது.

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *