2014 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச மட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று கழகங்களுக்கிடையிலான கரப்பந்து போட்டி பருத்தித்துறை சென் அந்தனிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
தொண்டைமானாறு மற்றும் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றுடன் மோதி இறுதிப் போட்டிக்குத் தெரிவான வல்வை விளையாட்டுக் கழகம் (ஆண்கள்), இறுதிப் போட்டியில் தொண்டைமானாறு விவேகானந்தாவுடன் மோதி கிண்ணத்தை தனதாக்கியது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்துடன் மோதிய பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது