Search

கோபிதாஸிற்கு அஞ்சலி செலுத்த அனைவரும் அணிதிரள்க!! சிவாஜிலிங்கம் அழைப்பு!!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸின் இறுதி கிரிகைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வடமராட்சி புலோலியில் உள்ள அவரது வீட்டில் நடைபெறவுள்ளது. தமிழ் இனத்துக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த கோபிதாஸிற்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்கள் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு வடமாகணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார் .


மேலும் தெரிவிக்கையில் பிரித்தானியா தமிழ் பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் 2007 மார்ச் மாதம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து புலிகளுக்கு நிதி சேகரித்தாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின் 8வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்துப்பட்டுருந்தார். இந்நிலையில் இருதயநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் உரிய சிகிச்சை அளிக்கபடாமயினால் கடந்த 24 திகதி மகசின் சிறைச்சாiயில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது.


தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக விசராணை எதுவுமின்றி சிறைச்சாலையில் பல கைதிகள் சித்திரைவதைக்கு உள்ளக்கப்பட்டுவருக்கின்றனார். இதன் எடுத்து காட்டே கோபிதாஸ் மரணமும் நிகழ்ந்துள்ளது. இந்த அரசாங்கம் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கோபிதாஸ் போன்று பல அரசியல் கைதிகள் தொடர்ந்தும் மர்மான முறையில் மரணமடையா நேரிடுமென்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *