தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இனவழிப்பு நடவடிக்கைளுக்கு நீதிகோரி ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமை ஆணையகத்தின் முன்னார் ஈழத் தமிழர்களால் மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (10-03-2014) பிற்்பகல் 1.30 மணியளவில் ”றுய் து மொம்பிரிலியன்” வீதியில் அமைந்துள்ள பூங்காவில் ஒன்று கூடிய மக்கள், அங்கிருந்த பேரணியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகம் வரை சென்றனர். கொட்டொலிகள் எழுப்பியவாறும், பதாதைகள் தாக்கியவாறும் தமக்கு நீதி வேண்டும் என பல ஆயிரம் மக்கள் பேரணியை கலந்துகொண்டனர்.