இலண்டன் ஜெகதீஸ்வரம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் வல்வை முத்துமாரி அம்மனுக்கு திருவிழாவை முன்னிட்டு வல்வை நகர் கணக்குப்படி இங்கு தினமும் விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
05.05.2012 சனிக்கிழமை காலை 10மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள்
06.05.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணிக்கு இந்திரவிழாவெனும் தீர்த்தத் திருவிழாவும் இனிது நடைபெறும்.
அதுசமயம் வல்வைமக்கள் அனைவரும் வந்திருந்து வல்வை முத்துமாரித்தாயாரின் பேரருளைப் பெற்றுய்யுமாறு திருக்கோயில் அறங்காவலர் சபை வேண்டிக்கொள்கிறது,