Search

வல்வெட்டித்துறை முன்பள்ளி கொத்தணி கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது16.03.2014

வல்வெட்டித்துறை முன்பள்ளி கொத்தணியின் கண்காட்சி தற்பொழுது வல்வை சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்றுவருகின்றது. 1 நாள் நடைபெறும் இந்த நிகழ்வு, இன்று காலை 9 மணியவில் ஆரம்பித்திருந்தது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கரவெட்டி விக்னேஸ்வரா அதிபர் திரு.N.கனகலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ், மற்றும் சிதம்பரக் கல்லூரி அதிபர் திரு.கி.இராஜதுரை அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கண்காட்சியில் வல்வெட்டித்துறை கொத்தணியில் உள்ள முன்பள்ளிகளான விவேகானந்தா பாலர் பாடசாலை (தொண்டைமனாறு), ஆதிசக்தி முன்பள்ளி, விக்னேஸ்வரா, கணபதி, திருமகள், பவானி, வளர்மதி ஆகிய பாலர் பாடசாலைகலைச் சேர்ந்த பாலர்களின் சுமார் 200 ற்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published.