கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் தடகள போட்டிகள், உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. உதைப்பந்தாட்ட போட்டி மாலை 05:00 மணியளவில்நடைபெற்றது. இப் போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதிய கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் 2:1 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2ம் இடத்தை கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் பெற்றது. தடகள போட்டிகளில் ஆண்களும் பெண்களும் பங்குபெற்றி பல வெற்றிகள் கண்டுள்ளனர்கள்.